Friday, 16 October 2026
இந்துக்களின் இந்துக்களால் இந்துக்களுக்கான
Indu Makkal Katchi Tamilazham
Indu Makkal Katchi Tamilazham
இந்துக்களின் இந்துக்களால் இந்துக்களுக்கான
செய்திகள்
Aug 22, 2026 | 79 பார்வைகள்

FCRA சட்ட மசோதாவிற்கு அர்ஜுன் சம்பத் வரவேற்பு

Featured Image

அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு!

FCRA (எப் சி ஆர் ஏ) சட்ட மசோதா மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசாங்கத்தால் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து பல்வேறு விதமான அவதூறு பிரச்சாரங்கள் காங்கிரஸ் திமுக உள்ளிட்ட இண்டி கூட்டணி கட்சியினர் மூலம் நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள கிறித்துவ திருச்சபைகள் கிறிஸ்தவ மிஷனரிகள் இந்தச் சட்டம் கிறிஸ்தவர்களுக்கு எதிரானது என்கிற பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள். திரு இனிகோ இருதயராஜ், சசிதரூர், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், கம்யூனிஸ்டுகள், இச்சட்டத்தை கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு எதிரானது என்று சித்தரிக்கிறார்கள்.

வெளிநாடுகளில் இருந்து மதப் பிரச்சாரம் மற்றும் மக்களுக்கு சேவை செய்வதற்கான நன்கொடைகளை பெறுகின்ற இந்த நிறுவனங்கள் அந்த நிதியை பயன்படுத்தி மதமாற்ற நடவடிக்கைகள், மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துதல், வளர்ச்சித் திட்டங்கள், மின் உற்பத்தி திட்டங்கள், துறைமுகம் அமைக்கும் திட்டங்கள், ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை தூண்டிவிட்டு நடத்தி கலவரம் செய்வதற்கு இந்த நிதி வசதிகளை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

என்ன நோக்கத்திற்காக நிதிகளை சேகரிக்கிறார்களோ அதற்காக பயன்படுத்தாமல் முழுமையாக சட்டவிரோத காரியங்களுக்கு மதமாற்ற நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுகிறது. இதை ஒழுங்குபடுத்த வேண்டும் வெளிநாட்டிலிருந்து பெறப்படும் நன்கொடைகள் சட்டப்படியாக உள்ளனவா? நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறதா? இதை கண்காணித்து சரி செய்வதற்காகவே இந்த சட்டம் மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்படுகிறது.

மடியிலே கனம் இருந்தால் தானே வழியிலே பயம்! காங்கிரஸ் கட்சி அமெரிக்க தொண்டு நிறுவனங்களிடம் ஜார்ஜ் சோரஸ் போன்ற இந்திய விரோதிகளிடம் நிதி பெற்று கிறிஸ்தவ மிஷனரிகளின் உதவியுடன் இந்தியாவில் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்துகிறது.

சமீபத்தில் புதுடில்லி ஜான்தர் மாந்தர் பகுதியில் கரப்பாம்பூச்சி கட்சியினரும் வெளிநாட்டு நன்கொடைகளை பெற்று பெரும் கலவரம் செய்தனர். இலங்கை நேபாளம் வங்கதேசம் போல இந்தியாவிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்து மாணவர் போராட்டங்கள் என்கிற பெயரில் கலவரம் செய்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

தமிழகத்தில் கூடங்குளம் அணு மின் உற்பத்தி திட்டத்தை எதிர்த்து போராட்டம், குளச்சல் துறைமுகத்தை எதிர்த்து போராட்டம்,ஸ்டெர்லைட் ஆலை எரிப்பு போராட்டம் உள்ளிட்டவை வெளிநாட்டு நிதி உதவியுடன் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்டன. மக்கள் அதிகாரம் உள்ளிட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் நக்சல் கம்யூனிஸ்ட் அமைப்புக்களுக்கு சீன கம்யூனிஸ்ட் நாட்டில் இருந்து நிதி உதவி செய்யப்படுகிறது.

எனவே வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்த வேண்டியது மத்திய பாஜக அரசின் கடமையாகும். இதனை முறையாக நாடாளுமன்றத்தில் சட்டமாக்குவதற்கு பிஜேபி முயற்சி எடுத்து வருகிறது இந்து மக்கள் கட்சி தமிழகம் இதனை வரவேற்கிறது. எப் சி ஆர் ஏ சட்டத்தை நாடு முழுவதும் உடனடியாக அமல்படுத்த கோரி மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

கருத்துகள் (0)

கருத்துகள் எதுவும் பதிவிடப்படவில்லை.