#அர்ஜுன்சம்பத் அறிக்கை! கோரிக்கை!
போராட்ட அறிவிப்பு!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உயர்திரு அஜித் தோவல் அவர்களை அவமதிக்கும் வகையில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் இராகுலுக்கு #இந்து_மக்கள்_கட்சி கடும் கண்டனம்!
இந்தோரில் நடைபெற்ற சத்ரோன் கி கூன்ச் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்கள் குறித்து மிகவும் அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்
அஜித் தோவல் தொலைபேசிகளை ஒட்டு கேட்பதாகவும், பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்டோருக்கு உளவு பார்ப்பதாகவும் கடுமையாக இராகுல் விமர்சித்துள்ளார். பொறுப்பற்ற முறையில் பேசி உள்ளார்.
அஜித் தோவல் அவர்கள் பஞ்சாப் பொற்கோயிலை காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றியவர். காந்தஹார் விமான கடத்தலின் பொழுது இந்திய மக்களை பத்திரமாக மீட்டவர்.
இந்தியாவுக்காக பாகிஸ்தானில் ஆறு வருட காலம் தலைமுறை வாழ்க்கை வாழ்ந்து இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் சதித்திட்டங்களை முறியடித்தவர்.
இந்திய இராணுவம் நிகழ்த்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடவடிக்கைகள் ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றின் வெற்றிக்கு காரணமானவர். அஜித் தோவல் அவர்களுக்கு அரசியல் கட்சிகள் முக்கியமல்ல தேசத்தின் பாதுகாப்பே முக்கியம். அதற்காகவே வாழ்ந்து வருபவர்.
இந்திய மக்களை கண்ணை இமை காப்பது போல பாதுகாத்து வருபவர். சர்வதேச தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சமீபத்தில் பிரிக்ஸ் மாநாடு இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெற்ற பொழுது அதற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புட்டின் கூட்டத்தில் இருந்த அஜித் தோவல் அவர்களை பார்த்து வணக்கம் தெரிவித்தார்.
வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் பாகிஸ்தானுக்காக சீனாவுக்காக இந்திய நலனைப் புறக்கணித்து பணியாற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் அஜித் தோவலை அவமதிக்கும் உள்நோக்கத்துடன் பேசி உள்ளார்.
காங்கிரஸ் கட்சியை தேசவிரோத அமைப்பாக சோனியாவும் ராகுலும் மாற்றி அமைத்துள்ளார்கள்.
இராகுலுக்கு வண்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். இராகுல் உடனடியாக அஜித்தோவல் அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இராகுல் தனது தேச விரோத போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையேல் இந்து மக்கள் கட்சி சார்பில் இராகுல் தமிழகத்திற்கு வரும் பொழுது கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் போராட்டம் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
#IMK Press Release
#weStandWithAjithThoval
கருத்துகள் எதுவும் பதிவிடப்படவில்லை.