Friday, 16 October 2026
இந்துக்களின் இந்துக்களால் இந்துக்களுக்கான
Indu Makkal Katchi Tamilazham
Indu Makkal Katchi Tamilazham
இந்துக்களின் இந்துக்களால் இந்துக்களுக்கான
செய்திகள்
Jul 10, 2026 | 186 பார்வைகள்

வைகை ஆற்றில் மாட்டு இறைச்சி கழிவுகள் | இந்து மக்கள் கட்சி புகார்

Featured Image

இந்துமக்கள்கட்சி செய்தி அறிக்கை!

பொருள்:மதுரை வைகை ஆற்றில் மாட்டு இறைச்சி கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும்,சட்டவிரோதமாக கன்று,மாடு வதை செய்து வைகை ஆற்றை நாசப்படுத்தும்  மாட்டிறைச்சி கடைகாரர்கள் மீது மதுரை மாவட்ட அரசு நிர்வாகம் சட்ட நடவடிக்கை எடுத்து புனிதமான வைகை நதியையும், சுற்றுசூழலையும் பாதுகாக்க கோரி இந்துமக்கள்கட்சி சார்பில் புகார் அறிக்கை செய்தி!

வணக்கம்,
மதுரை வைகை ஆற்றை அசுத்தம் படுத்தும் விதமாக ஆற்றில் குப்பை கொட்டுவதையும்,கழிவுநீர் கலப்பதையும்,இறைச்சி கழிவுகளை கொட்டுவதையும் தடுப்பதற்காக அரசாங்கமும்,தொண்டு நிறுவனங்களும் தினந்தோறும் பல்வேறு  விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருகின்றன.

இந்நிலையில் வைகை தென்கரையில் உள்ள  நூர் பள்ளிவாசல், பட்டறைகாரத்தெரு,பனையூர் கால்வாய் ஓபுளா படித்துறை வரை சாலை ஓரத்தில் உள்ள மாட்டிறைச்சி கடைகள் இயங்கி வருகின்றன.இங்கு  சட்டத்திற்கு புறம்பாக மாடுகளை வதை செய்து  வியாபாரம் செய்து வருவது மட்டுமல்லாமல் மாட்டிறைச்சி கழிவுகளை வைகை ஆற்றிலும்,பனையூர் கால்வாயிலும் கொட்டி வருகிறார்கள். இதனால் சுற்றுசூழலை பாதிக்கும் வகையில்  வைகை ஆறும்,பனையூர் கால்வாயும் மாசடைந்து  வருகிறது.

இந்த பகுதியில் பொதுமக்கள் நடந்து சென்றாலோ வாகனத்தில் சென்றாலோ  மூக்கை பிடிக்கும் வகையில் மாட்டிறைச்சியின் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை உண்டாக்கும் வகையில் இருக்கிறது.
இச்செயலை இந்துமக்கள்கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மேலும் ஆடுகளை வதை செய்வதற்க்கு ஆடுவதைக்கூடம் இருப்பதை போல்,மாடுகளை வெட்டுவதற்கு அரசாங்கத்தால் இடம் தேர்வு செய்யப்பட்ட எல்லீஸ்நகரில் உள்ள மாடு வதை கூடத்தில் தான் மாடுகளை வெட்ட வேண்டுமென்று விதிமுறைகள் இருக்கும் போது அதனை பின்பற்றாமல் மாட்டிறைச்சி கடைகளில் மாடுகளை வெட்டுவது சட்டத்திற்கு புறம்பான செயல்.இந்த மாட்டிறைச்சி கடைகாரர்களுக்கு பின்புலமாக சில ஜமாத்துக்களும்,இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளும் பாதுகாத்து வருகிறார்கள்.

மதுரையில் மாவட்ட ஆட்சியரும், மாநகராட்சி ஆணையரும் பல்வேறு பகுதிகளுக்கு சென்று  நேரில் ஆய்வு செய்வது போல் இப்பகுதியிலும் மாவட்ட ஆட்சியரும் மாநகராட்சி ஆணையரும் நேரில் நடந்து சென்று ஆய்வு செய்தால் சுகாதார சீர்கேட்டின் உண்மை நிலை என்ன என்பது  தெரியும்.

ஆரோக்கியமாக உள்ள விலங்குகளைத் துன்புறுத்துவது, முறையற்ற வகையில் அடைத்து வைப்பது மற்றும் சட்டத்திற்குப் புறம்பாக இறைச்சிக்காகப் பயன்படுத்துவது விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம், 1960 (Prevention of Cruelty to Animals Act, 1960):
தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசின் இறைச்சிக் கூடங்கள் விதிமுறைகள் (FSSAI Rules) படி 
பால் தரும் பசுக்கள், உழைக்கும் மாடுகள் மற்றும் ஆரோக்கியமான கன்றுக் குட்டிகளைக் இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி இல்லை.

கால்நடை மருத்துவரின் முறையான ஆய்வுச் சான்றிதழ் (Fit for Slaughter Certificate) இல்லாமல் எந்தவொரு மாட்டையும் கசாப்பு செய்ய முடியாது.

தெருக்களிலோ, திறந்த வெளிகளிலோ, கடையின் முன்பகுதியிலோ அல்லது பஞ்சாயத்து/மாநகராட்சியின் உரிமம் பெறாத இடங்களிலோ மாடுகளை வெட்டுவது முற்றிலும் சட்டவிரோதமாகும்.

அரசு அல்லது உள்ளாட்சி அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சிக்கூடங்களில் (Slaughterhouses) மட்டுமே வெட்டப்பட வேண்டும்.

மாட்டை வெட்டுவதற்கு முன், தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவ ஆராய்வுப் பரிசோதனை (Ante-mortem inspection) செய்ய வேண்டும்.

பால் தரும் பசுக்கள், உழைக்கும் மாடுகள், ஆரோக்கியமான கன்றுக் குட்டிகள் மற்றும் சினைப் பசுக்களை இறைச்சிக்காகப் பயன்படுத்த அனுமதி கிடையாது.

எனவே மேற்கூறிய சட்டவிதிமுறைகளை எதையும் பின்பற்றாமல் சட்டவிரோதமாக கன்று குட்டி போன்ற மாடுகளை வதை செய்வதையும், மாட்டிறைச்சி கழிவுகளை வைகை ஆற்றில் கொட்டு வருவதையும்  உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
அரசு தேர்வு செய்துள்ள மாடு வதை கூட இடத்தில் மாடுகளை வதை செய்யாமல் சட்டத்திற்கு புறம்பாக வியாபார நோக்கத்தோடு மாடுகளை வதை செய்து மாட்டிறைச்சி கழிவுகளை வைகை ஆற்றிலும்,கால்வாயிலும் கொட்டி நீர் ஆதாரமான வைகை ஆற்றை நாறடிக்கும் வகையில்  அசுத்தத்தையும்,சுகாதார சீர்கேட்டையும்  வேண்டுமென்றே திட்டமிட்டு  உண்டாக்கி வரும் மாட்டிறைச்சி கடைகாரர்கள் மீதும்,அதற்கு மதரீதியாக துணை போகும் நபர்கள் மீதும் மேற்கண்ட சட்டவிதிகளின் படி வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும். மதுரை மக்களின் உயிர் நாடி நீர் ஆகாரமான வைகை ஆற்றின் புனிதத்தையும், சுற்று சூழலையும் பாதுகாக்கும் வகையில் மதுரை மாவட்ட அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது நலன் கருதி இந்துமக்கள்கட்சி சார்பில் இந்த அறிக்கையின் மூலமாக இக்கோரிக்கை புகார் சமர்பிக்கப்படுகிறது.

இப்படிக்கு
M.சோலைகண்ணன்
இந்துமக்கள்கட்சி
மதுரை மாவட்டத்தலைவர்.
அறிக்கை நாள்:21/08/2026.

கருத்துகள் (0)

கருத்துகள் எதுவும் பதிவிடப்படவில்லை.